facebook pixel
chevron_right Top
transparent
மகா புஷ்கர விழாவையொட்டி கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணிக்கு வழிபாடு
42:11 அம்பை: தாமிரபரணி மகாபுஷ்கர விழாவை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி அருகே தாமிரபரணி நதிக்கரையில் மாதா தாமிரபரணி அறக்கட்டளை சார்பில் ஆரத்தி பூஜை நடந்தது. தாமிரபரணி மகா புஷ்கர விழா வருகிற அக்.11 முதல் 22ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து தாமிரபரணியின் ஜென்ம நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை தாமிரபரணிக்கு மலர் தூவி, ஆரத்தி நடந்தது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியில் டாக்டர்கள் பத்மநாபன், கோமதி அன்னபூரணி, ராஜலட்சுமி, திலகர் பள்ளி ராகவன், சாய்சங்கர், அப்துல் கலாம் நண்பர்கள் குழுவினர், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App