facebook pixel
chevron_right Top
transparent
இலவச கச்சா எண்ணெயை தேடும் பாஜக; பா.சிதம்பரம் சாடல்!
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், எங்காவது கச்சா எண்ணெய் கிடைக்குமா என தேடுங்கள் என மத்திய அரசுக்கு மூத்த தலைவர் பா.சிதம்பரம் சாடியுள்ளார்! கடந்த ஆகஸ்ட் மாத்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புக் குறைவு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு காரணம் தெரிவித்து வருகிறது. ஆனால், நேற்று ஹைதராபாத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, பெட்ரோல், டீசல் விலையை உயர்வைக் கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். தினசரி உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் சாமானிய மக்கள், நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App