facebook pixel
chevron_right Top
transparent
மேலூர் அருகே அசத்தல் பனை விதை விதைத்த பள்ளி மாணவர்கள்
04:50 மேலூர்: நேச்சர் கிளப்பை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கிராமப்புற கண்மாயில் பனை விதைகளை விதைத்து, அரிதான பறவை இனங்களை காணும் நிகழ்வு மேலூர் அருகே நடைபெற்றது. மேலூர் அருகில் உள்ள அரிட்டாபட்டி இயற்கை சூழ்ந்த 7 மலை தொடர்கள் கொண்ட பகுதியாகும். இங்கு அரிதாக காணப்படும் பல்வேறு வகையான பறவை இனங்கள் உள்ளது. அவ்வப்போது பறவை ஆர்வலர்கள் இங்கு வந்து அவற்றை ஆவணப்படுத்தி செல்வது வழக்கம். இந்த நிலையில், நேற்று மதுரை கருப்பாயூரணியில் உள்ள டிவிஎஸ் லட்சுமி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த நேச்சர் கிளப் மாணவர்கள் 40 பேர் அரிட்டாபட்டிக்கு வந்தனர். இவர்களுடன் பள்ளி ஆசிரியை கலையரசி, அரவிந்த் கண்மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் கவுசல்யா கலந்து கொண்டனர். ஏழுமலை பாதுகாப்பு செயலாளர் ரவிச்சந்திரன் மாணவர்களுக்கு இயற்கை குறித்து விளக்கி கூறினார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App