facebook pixel
chevron_right Top
transparent
அரசு அனுமதி அளித்தால் நாடு முழுவதும் ரூ.35-40க்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்க தயார் பாபா ராம்தேவ்
அரசு அனுமதி அளித்தால் நாடு முழுவதும் ரூ.35-40க்கு பெட்ரோல் மற்றும் டீசலை வழங்க தயார் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்வது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அந்த நடைமுறை வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தினசரி கட்டணம் நிர்ணயம் நடைமுறைக்கு வந்த போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 68 ரூபாய் 02 காசுகள் என்றும், டீசல் விலை 57 ரூபாய் 41 காசுகள் என்றும் இருந்தது. அதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை எகிற தொடங்கியது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App