facebook pixel
chevron_right Top
transparent
மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்: சிகிச்சைக்கு அனுப்ப மறுத்து தகராறு
06:11 வத்திராயிருப்பு: சமூக வலைத்தளத்தை பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர், பின்னர் குழந்தை, மனைவியை சிகிச்சைக்கு அனுப்ப மறுத்து தகராறு செய்ததால் வத்திராயிருப்பு அருகே பரபரப்பு ஏற்பட்து. மதுரை மாவட்டம், திருமங்கலம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முகமது தாஜூதீன்(29). இவரது மனைவி அன்சுல் பாத்திமா(24). இருவரும் தற்போது விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருகின்றனர். அன்சுல் பாத்திமா முதன்முறையாக கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டில் வைத்து பிரசவம் பார்க்க கணவர் முடிவு செய்தார். இதனால் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்கு கூட அழைத்து செல்லவில்லை என கூறப்படுகிறது. ஒரே ஒருமுறை மட்டும் திருமங்கலத்தில் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்நிலையில் அன்சுல் பாத்திமா பிரசவத்திற்காக கணவருடன் தம்பிபட்டி கிருஷ்ணாபுரத்தில் தங்கினார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App