facebook pixel
chevron_right Top
transparent
திருச்சி காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் விடிய விடிய கரைப்பு
45:14 திருச்சி: விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சியில் 400 இடங்களிலும், மாவட்டத்தில் 1030 இடங்களிலும், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நேற்று நடந்தது. முன்னதாக காவிரி ஆற்றில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. சிந்தாமணியில் இருந்து காவிரி பாலம் வழியாக ரங்கம் நோக்கி செல்லும் போது சிலைகள் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு ஆற்றில் கரைக்கப்படுவதற்காக 3 இடங்களில் பாலத்தில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை முதல் மாநகரில் வைக்கப்பட்டு இருந்த சிலைகள் ஒவ்வொ ன்றாக மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க ஊர் வலமாக கொண்டு வரப்பட்டன. மேடையில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு கிரேன் மூலம் ஒவ்வொரு சிலையாக ஆற்றில் இறக்கி கரைக்கப்பட்டு வந்தன.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App