facebook pixel
chevron_right Top
transparent
பீகாரில் நர்சுக்கு பாலியல் தொல்லை: டாக்டருக்கு சரமாறி அடி உதை
பீகாரில் நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டரை சக நர்சுகள் ஒன்று சேர்ந்து சரமாறியாக செருப்பால் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் கதிர்காரின் சதர் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவர், நர்சுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் சக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். ஒன்று கூடிய நர்சுகள் டாக்டரை கடுமையாக தாக்கினர். குற்றம் சாட்டப்பட்ட டாக்டரை நர்சுகள் செருப்பால் சரமாரியாக தாக்கும் காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலியல் புகாரில் சிக்கிய டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App