facebook pixel
chevron_right Top
transparent
வரும் 2022ம் ஆண்டிற்குள் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
30:48 திருமலை: வரும் 2022ம் ஆண்டிற்குள் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்ைத செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் இன்று திருப்பதியில் தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இன்றிரவு 10.8 மணியளவில் பிஎஸ்எல்வி சி 42 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. நாட்டை சேர்ந்த இந்த ராக்கெட் வர்த்தக ரீதியாக ஏவப்படுகிறது. இதற்கு முன்பு மற்ற செயற்கைக்கோளுடன் இணைந்து வர்த்தக ரீதியான ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தி வந்தோம். இன்று செலுத்தும் இந்த ராக்கெட் முற்றிலும் வர்த்தக ரீதியிலானது. நவம்பர் மாதம் ஜிஎஸ்எல்வி மாக். டி2, ஜி.சாட் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App