facebook pixel
chevron_right Top
transparent
மீத்தேன் எடுக்க ஆய்வா? மண் ஆய்வு பணியை தடுத்த பொதுமக்கள்
28:39 திருவிடைமருதூர்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் துக்காச்சி கிராமத்தில் காளியம்மன் தெருவில் புதிதாக அரசு மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டு வருகிறது. அதன் அருகே 600 அடி ஆழத்தில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்றில் 35 ராட்சத இரும்பு குழாய்கள் திடீரென வந்து இறங்கியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மீத்ேதன் எடுப்பதாக சந்தேகித்து இரும்பு குழாயக்களை அப்புறப்படுத்த கோரி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த நாச்சியார்கோவில் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு குழாய்கள் லாரி மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App