facebook pixel
chevron_right Politics
transparent
திருமயம் காவல் நிலையத்தில் ஹெச். ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல தடை விதித்த காவல்துறையினருடன் பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் ஹெச். ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது திருமயம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு இந்து முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு மெய்யபுரம் மகாமுத்து மாரியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மதியம் 2 மணிக்கு விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை பா.ஜ.க வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App