facebook pixel
chevron_right Technology
transparent
ஒன்பிளஸ் டைப்-C புல்லட் இயர்போன் அறிமுகம்.! விலை மாற்று விபரக்குறிப்பு.!
ஒன் பிளஸ் நிறுவனம் அடுத்தடுத்த அதிரடி அறிமுகங்களினால் தனது பயனர்களைச் சந்தோசத்தில் திக்குமுக்காட வைத்துக்கொண்டிருக்கிறது. அதன் அடுத்த கட்டமாக ஒன் பிளஸ் 6T மொபைல் போனைக் களமிறக்க உள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இப்போது ஒன் பிளஸ் 6T யுடன் புதிய ஒன் பிளஸ் டைப்-C புல்லட் இயர்போனும் வெளியிடப்படப்போவதாகச் செய்தி தகவல்கள் நம் செவிகளுக்கு வந்தடைந்துள்ளது. இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஒன் பிளஸ் புல்லட் V2 மாடலில் சில மாறுதல்களுடன் நீடித்து உழைக்கும் பயன்பாட்டுடன் வருகிறது இந்த புதிய ஒன் பிளஸ் டைப்-C புல்லட் இயர்போன். அரமிட் பைபர்கள் மூலம் உருவாக்கப்பட்ட உட்கம்பிகளை கொண்டதால் இந்த இயர்போன் இழுக்கப்படும்பொழுது எளிதாகச் சேதம் அடையாது என ஒன்பிளஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App