facebook pixel
chevron_right Top
transparent
வாரணாசியில் நாளை பள்ளி மாணவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார் பிரதமர் மோடி
29:11 லக்னோ: தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு நாளை 17-ம் தேதி 68-வது வயது பிறக்கிறது. இதையொட்டி, இரண்டு நாள் பயணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் வாரணாசி வரும் பிரதமர், தனது பயணத்தின்போது புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்கிறார். பாரா லால்பூரில் சுமார் 5,000 குழந்தைகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் சலோ ஜீதே ஹெயின் 32 நிமிட படத்தை அவர் பார்க்கின்றார். பின்னர் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App