facebook pixel
chevron_right Top
transparent
போலீஸ், ஹைகோர்ட் குறித்து அவதூறு பேச்சு... கைதாகிறாரா எச் ராஜா?
போலீஸ் மற்றும் நீதிமன்றம் ஆகியவைக்கு எதிராக அவதூறாக பேசிய எச் ராஜாவை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எச்.ராஜா. டிஜிபி, போலீஸார், உயர்நீதிமன்றம் ஆகியோரை மிகவும் அவதூறாகப் பேசினார் இந்த நிலையில் திருமயம் காவல் நிலையத்தில் எச். ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எச் ராஜாவுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த விவகாரம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வரை சென்றால் அவர் காவல் துறையை கேள்வி கேட்பர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App