facebook pixel
chevron_right Top
transparent
தராதரம் இல்லாம பேசுவது.. பின்னர் மறுப்பது.. எச் ராஜாவை இளைஞர்கள் வெறுக்காமல் என்ன செய்வர்?
தராதரம் இல்லாமல் பேசுவது பின்னர் அதை மறுப்பது. இதுதான் எச் ராஜா போன்ற அரசியல்வாதிகளை இளைஞர்கள் வெறுக்க காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிமணி தெரிவித்தார். புதுக்கோட்டையில் பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த எச் ராஜா போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் பேசுகையில் போலீஸ் மொத்தமும் கரப்ட் (ஊழல்). போலீஸோட ஈரல் 100 சதவிகிதம் அழுகி போச்சு. நான் இங்க இருக்குற இந்து வீடு வழியா போறேன். கிறிஸ்துவர், முஸ்லிம், பாதிரியார் கைகூலி நீங்கதான். பயங்கரவாதிக்கு துணை போறீங்க என்று பேசியுள்ளார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் எச் ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App