facebook pixel
chevron_right Top
transparent
எச். ராஜா மீது திருமயம் காவல் நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு
காவல்துறை மற்றும் உயர்நீதிமன்றத்தை மிகவும் அநாகரீகமாக விமர்சித்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமயத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எச்.ராஜா. டிஜிபி, போலீஸார், உயர்நீதிமன்றம் ஆகியோரை மிகவும் அவதூறாகப் பேசினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திருமயம் காவல் நிலையத்தில் எச். ராஜா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜா மீது உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நாளை தலைமை நீதிபதியிடம் முறையிடவுள்ள நிலையில் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App