facebook pixel
chevron_right Top
transparent
அரியானா கற்பழிப்பு விவகாரம்; இழப்பீடு வேண்டாம், குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: பெண்ணின் தாயார்
அரியானா கற்பழிப்பு விவகாரத்தில் தங்களுக்கு இழப்பீடு வேண்டாம், நீதி வேண்டும் என்றும் குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறியுள்ளார். அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் சி.பி.எஸ்.இ. தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக பிரதமர் மோடியிடம் விருது பெற்றவர். அவர் நேற்று முன்தினம் சிறப்பு பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது அவரை வழிமறித்த மூன்று வாலிபர்கள் அவரை ஒரு காரில் கடத்தி சென்றனர். அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை அந்த மூவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த வயலில் இருந்த மற்றவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App