facebook pixel
chevron_right Top
transparent
அருணாசல பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நில சரிவில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
அருணாசல பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நில சரிவில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இட்டாநகர், அருணாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் மோடிரிஜோ, டோன்யி போலோ பகுதி, சந்திரா நகர், லோபி, ஜி.எஸ்.எஸ். போலீஸ் காலனி, பிரெஸ் காலனி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் 26 வீடுகள் அடித்து செல்லப்பட்டு உள்ளன. இதனுடன் 60 வீடுகள் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியாகவோ சேதமடைந்து உள்ளன. சில பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதுடன், கால்வாயின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் மோடிரிஜோ பகுதியில் 32 வயது நிறைந்த மேரி பியோங் என்ற பெண்ணின் உடல் மீட்கப்பட்டு உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App