facebook pixel
chevron_right Top
transparent
ஐக்கிய ஜனதாதளத்தில் இணைந்தார் தேர்தல் வியூக நிபுணர் கிஷோர் பிரஷாந்த்
தேர்தல் வியூக நிபுணர் கிஷோர் பிரஷாந்த் தற்போது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது கூட்டணி வேட்பாளர்களுக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்து வந்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் நரேந்திர மோடியுடன் தேர்தல் வியூக பணிகளை ஆற்றி வருபவர் கிஷோர் பிரஷாந்த் (41). இவரது வியூகம்தான் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் மூலம் நாட்டின் பிரதமராக்கியது. இந்த தேர்தல்களுக்கு பிறகு கிஷோருக்கும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு இடையே சிறிது கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதையடுத்து கிஷோர் அங்கிருந்து விலக நினைத்தார். இதையடுத்து அவர் இன்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முன்பு ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App