facebook pixel
chevron_right Entertainment
transparent
தமிழில் வெளிவருகிறது ஹாலிவுட் வெனம்
எழுத்தின் அளவு: ஹாலிவுட்டின் அடுத்த எதிர்பார்ப்பு வெனம். மார்வெல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கொலம்பியா பிக்சர்சும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை ரூபன் பெலிச்சர் இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சோம்பிலேண்ட், 30 மினிட்ஸ் லெஸ், கேங்ஸ்டர்ஸ்வாட், டூ நைட் ஸ்டேண்ட், படங்களை இயக்கியவர். லெஜண்ட், லண்டன் ரோட், ஸ்டார் வார்ஸ் படங்களில் நடித்த டாம் ஹார்டி ஹீரோ. அவருடன் மைக்கேல் வில்லியம்ஸ், ரிஸ் அகமட் ஆகியோர் நடித்துள்ளனர். லுட்வின் கிரான்சன்ஸ் இசை அமைத்துள்ளார், மேத்யூ லிபட்டிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். அரசு எதிரான செய்திகளை சேகரித்து வெளியிடும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் உடலுக்குள் ஏலியன்ஸ் மாதிரியா ஒரு வெளிகிரக உயிரினம் புகுந்து கொண்டு அட்டகாசம் செய்வதும். அந்த உயிரினத்திடமிருந்த பத்திரிகையாளரை காப்பாற்றுவதும் படத்தின் கதை. நவீன தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App