facebook pixel
chevron_right Entertainment
transparent
இதையும் பாருங்க !
எழுத்தின் அளவு: மெட்ரோ படத்தில் நடித்து பிரபலமானவர் சிரிஷ். அதையடுத்து அவர் நடித்துள்ள படம் ராஜா ரங்குஸ்கி. இந்த படத்தை ஜாக்சன்துரை, பர்மா படங்களை இயக்கிய தரணிதரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சாந்தினி பேசும்போது, நானும், சிரிசும் எல்லா காட்சிகளிலுமே சிங்கிள் டேக்கில் ஓகே செய்தோம். ஆனால் ஒரேயொரு காட்சியில் மட்டும் நான் சரியாக நடித்தபோதும், சிரிஷ் 19 டேக் வாங்கினார் என்று பேசியவர் அது என்ன காட்சியென்று சொல்லவில்லை. அதையடுத்து பேச வந்த சிரிசும் அந்த காட்சி குறித்து பேசாமலேயே சென்று விட்டார். பின்னர் அவரிடம் அதுகுறித்து கேட்டபோது, இந்த படத்தில் ஒரு லிப்லாக் காட்சி உள்ளது. அதில் நடிக்க எனக்கு தயக்கமாகவும், கூச்சமாகவும் இருந்தது. அதனால்தான், திரும்பத்திரும்ப ரீடேக் ஆகி விட்டது என்றார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App