facebook pixel
chevron_right Health
transparent
அபிராமிகள் ஏன் உருவாகிறார்கள்?''
வெளிநாட்டினரே வியந்து பாராட்டும் அளவுக்கு பண்பாடும் பாரம்பர்யமும் மிக்கது நம்முடைய குடும்ப அமைப்பு. அது இப்போது கேள்விக்குறியாகிக்கொண்டு வருகிறது. அண்மையில், குன்றத்தூரில் பெற்ற தாயே இரு குழந்தைகளை கொலை செய்துள்ள சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. 'கூட்டுக் குடும்பங்கள் சிதைக்கப்பட்டதன் பிரதிபலன்தான் இது' என்கிற குரல்கள் பொதுவெளியில் அதிகம் ஒலிக்கத்தொடங்கியிருக்கின்றன. நம்முடைய குடும்ப அமைப்பின் அடித்தளம் ஆட்டம் காணத்தொடங்கியிருக்கிறதா? 'இந்தியக் குடும்பங்களில் 'தாய்' என்கிற பாத்திரத்துக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. ஆனால், அத்தகைய தாயுள்ளம் கொலை செய்யுமளவுக்கு மாறுகிற மனநிலையின் பின்னணி என்ன?' மனநல மருத்துவர் ஷாலினியிடம் கேட்டோம். குன்றத்தூர்ல நடந்த சம்பவத்தை நாம் மேலோட்டமா அணுக முடியாது. இதுல பல உளவியல் காரணங்கள் இருக்கு. நம்முடைய சமூகத்துல ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பது பெரும்பாலும் பெற்றோர் பார்த்து வைக்கிறதுதான்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App