facebook pixel
chevron_right Top
transparent
எச். ராஜாவுக்கு எதிராக அணி திரள்கிறார்கள் வழக்கறிஞர்கள்!
காவல்துறையினர், டிஜிபி, சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றை நடுத் தெருவில் நின்று படு அசிங்கமாக விமர்சித்துப் பேசிய எச். ராஜாவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் அணி திரள்கின்றனர். காவல்துறையினரையும், டிஜிபியையும் படு மோசமாக விமர்சித்து எச். ராஜா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை விட மோசமாக உயர்நீதிமன்றத்தைப் பார்த்து சொல்லக் கூடாத, தகாத வார்த்தையால் விமரா்சித்துள்ளார் எச். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வரலாற்றில் இதுவரை யாருமே இப்படி நடுத் தெருவில் நின்று கொண்டு உயர்நீதிமன்றத்தை விமர்சித்ததில்லை. இதனால் சட்டத் துறையினரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராஜா விவகாரத்தை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். நாளை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதியை நாளை சந்தித்து முறையிடவுள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App