facebook pixel
chevron_right Top
transparent
பிரசாந்த் கிஷோர், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன்னிலையில் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார்
10:12 பாட்னா: தேர்தல் வியூக நிபுணர் என்றழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன்னிலையில், ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சிகள், தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில், திட்டங்களை வகுத்து கொடுப்பதுடன், பிரசாரத்தை ஒருங்கிணைப்பதில் கில்லாடி என பெயர் பெற்றவர். கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின் போதும், 2014 லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ., ஆட்சியை பிடிக்க கிஷோர் பணியாற்றினார். பின்னர் பீஹார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக பணியாற்றி, வெற்றியை தேடிக் கொடுத்தார். ஆனால், உத்திரபிரதேசத்தில் அவரது வியூகம் வெற்றி பெறவில்லை. இதனால் சில நாட்கள் அவர் அமைதியாக இருந்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App