facebook pixel
chevron_right Politics
transparent
அ.தி.மு.கவில் உள்கட்சித் தேர்தல்... தொண்டர்களை உற்சாகமாக்கும் திட்டங்கள்!
நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் அ.தி.மு.க பிரச்னை வெடித்துக் கிளம்பி நிற்கும் நிலையில், உள்கட்சி தேர்தலை நடத்தி விட வேண்டும் என்ற முனைப்பில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்கான பிளான்களுடன் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு அவர்கள், ரெடியாகி வருகிறார்கள். "எம்.ஜி.ஆர்., ஜெயலலலிதா வழியில் அ.தி.மு.க-வை நடத்துகிறோம்" என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் சொல்லி வருகிறார்கள். "அ.தி.மு.க இரும்புக் கோட்டை; அதை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது" என்று ஆளும்கட்சி அமைச்சர்களும் பொதுக்கூட்ட மேடைகளில் வீராவேசமாக முழங்கி வருகிறார்கள். ஆனால், இவர்களுக்கு டி.டி.வி.தினகரனும் முன்னாள் எம்.பி கோவை கே.சி.பழனிசாமியும் கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறார்கள். பொதுச்செயலாளர் பதவி ஒழிப்பு செல்லாது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App