facebook pixel
chevron_right Top
transparent
எப்போதும் போலீசுக்கு சப்போர்ட் பண்ணும் ரஜினி. எச்.ராஜா பேச்சை கண்டிப்பாரா?
போலீஸ் குறித்து மிகவும் மோசமாக பேசிய எச்.ராஜாவிற்கு எதிராக எப்போதும் போலீசுக்கு ஆதரவாக பேசும் ரஜினிகாந்த் ஏதாவது கருத்து தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொதுவாக டிவிட்டர் மூலம் வைரல் ஆகும் எச். ராஜா தற்போது வீடியோ மூலம் வைரலாகி உள்ளார். வடஇந்திய ஊடகங்கள் கூட எச்.ராஜாவை வைத்து விவாதம் நடத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அழைக்கப்பட்டு இருந்தார். மேடை அமைக்க அனுமதி மறுத்ததால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தது வைரலாகி உள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App