facebook pixel
chevron_right Top
transparent
மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் மாற்றப்பட்ட முடிவு உயரிய மட்டத்தில் எடுக்கப்பட்டதாக சிபிஐ விளக்கம்
15:58 டெல்லி: தொழிலதிபர் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் மாற்றப்பட்ட முடிவு உயரிய மட்டத்தில் எடுக்கப்பட்டதாக சிபிஐ விளக்கமளித்துள்ளது. ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் தங்கியுள்ளார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 10ம் தேதி வழங்கப்பட உள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த போது, மல்லையா, தான் லண்டன் செல்வதற்கு முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசியதாக கூறினார். ஆனால், இதனை அருண் ஜெட்லி மறுத்துள்ளார். பார்லிமென்ட் வளாகத்தில் ஒரிரு நிமிடங்கள் தான் இந்த சந்திப்பு நடந்தது. கடன் சர்ச்சை தொடர்பாக வங்கி நிர்வாகத்திடம் பேசி கொள்ளுமாறு மல்லையாவிடம் கூறிவிட்டதாக விளக்கமளித்திருந்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App