facebook pixel
chevron_right Top
transparent
கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
13:51 கச்சத்தீவு: கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மேலும் படகில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 1200 மீனவர்கள் 265 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர். தமிழக மீனவர்களிடம் நீங்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உடனே இங்கிருந்து செல்லுங்கள் என்று எச்சரித்தனர். அப்போது மீனவர்கள் படகுகளை திருப்பிக்கொண்டு கரைக்கு திரும்ப ஆயத்தமான போது இலங்கை கடற்படையினர் திடீரென்று ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்தனர். பின்னர் உடனே இடத்தை காலி செய்யுங்கள் என்று விரட்டியடித்தனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App