facebook pixel
chevron_right Politics
transparent
குற்றமே நடைபெறாவிட்டால், ஐ.நா. பொதுவிசாரணைக்கு ராஜபக்சே அனுமதிக்காதது ஏன்?
இலங்கை முன்னாள் அதிபரான இவரின் பெயரைக் கேட்டாலே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு வெறுப்பும், எதிர்ப்புஉணர்வும் ஏற்படும். ஏனென்றால், விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, அதாவது 2009-ம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது இலங்கை அதிபராக இருந்தவர் அவர். இலங்கையில் நடத்தப்பட்ட அந்த கொடூரமானப் போருக்கு இந்திய அரசின் ஆயுத உதவி மற்றும் உறுதுணையும், மத்திய அரசில் அங்கம் வகித்த அப்போதைய தமிழக அரசின் ஆதரவும் இருந்தது எனக் குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது. தமிழர்கள் யாரும், அவ்வளவு எளிதில் அந்தப் போரை மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்தப் போரின்போது, ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App