facebook pixel
chevron_right Technology
transparent
மிகவும் ரகசியமான அமெரிக்கத் தொழில் நுட்பம் வெளிப்பட்டு விட்டதா? வினோதமான முக்கோண வடிவ விமானத்தால் பரபரப்பு!
அமெரிக்காவின் இரகசிய இராணுவத் தளத்திற்கு அருகே முக்கோண வடிவ மர்மமான பறக்கும் பொருள் கண்டறியப்பட்டு உள்ளது. அது அமெரிக்க ராணுவம் சோதித்துப் பார்த்த TR-3B விமானமாகக் கூட இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோ நகரைச் சேர்ந்தவர்கள் வானத்தில் வினோதமான முக்கோன வடிவப் பொருள் பறப்பதைக் கண்டுள்ளனர். செப்டம்பர் மாத இரண்டாவது வாரத்தில் இது நிகழ்ந்துள்ளது. அதனைக் கண்டவர்கள் அதனைப் படம் பிடித்துள்ளனர். இந்நகருக்கு அருகே அமெரிக்க ராணுவ ஆய்வு மையம் உள்ளது. இம் மையத்திலிருந்து சோதனைக்காகப் பறக்கவிடப்பட்ட விமானமாக அது இருக்கலாம் எனக் கருதவும் இடமுண்டு. இந்த முக்கோண வடிவ மர்ம விமானம் தொடர்பாகப் பல குழப்பமான செய்திகளும் உலா வருகின்றன.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App