facebook pixel
chevron_right Politics
transparent
காவல்துறையை கேவலமாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்காத அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது: முத்தரசன் பேட்டி
33:43 புதுக்கோட்டை: காவல்துறையை கேவலமாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்காத அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் பாஜக ஒழிக என கோஷமிட்ட தூத்துக்குடி சோபியா மீது அரசு நடவடிக்கை எடுத்து கண்டனத்துக்குரியது என்றும் முத்தரசன் தெரிவித்துள்ளார். விஏஓ முதல் சிறைத்துறை வரை ஊழல் நிறைந்துள்ளது சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதற்கு சிறந்த உதாரணம் என அவர் கூறியுள்ளார். மேலும் குட்கா வழக்கில் வேறு யாரும் மாட்டிக்கொள்ள கூடாது என்பதற்காக அமைச்சருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அனைத்து சிறைகளில் இருந்தும் மாதாமாதம் ரூ. 5 லட்சம் சட்ட அமைச்சருக்கு செல்கிறது என்றும் முத்தரசன் கூறியுள்ளார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App