facebook pixel
chevron_right Health
transparent
அடிக்கடி தலைச்சுற்றுவது ஏன்
எனக்கு அடிக்கடி தலைச்சுற்று ஏற்படுகிறது. தலைச்சுற்றை நாம் மூன்று வகையாக பிரிக்கலாம். உடம்பு, தலை மட்டும் சுற்றுவது போல் தோன்றுவது. சுற்றுப்புறங்களில் உள்ள அலமாரி, டேபிள், நாற்காலி போன்றவை சுற்றுவது போல் தோன்றுவது. சில நேரங்களில் இரு கால்களும் சுற்றுவது போல் தோன்றுவது ஆகியனவாகும். இதற்குரிய காரணங்கள் முக்கியமாக காதில் கோளாறு ஏற்படுவது தான். ஏனென்றால் காதுகளின் கேட்கும் திறனானது நடக்கும் போதும், நிற்கும் போதும் சம நிலையை ஏற்படுத்தும். எனவே காது கோளாறுகள் மற்றும் உள் காதில் நீர் அதிகமாக இருத்தல், காதில் கிருமி தொற்று, ஒற்றைத்தலைவலி, சிலருக்கு மூளை சம்பந்தமான நோய்களாலும் தலைச்சுற்றல் ஏற்படலாம். ரத்தக்கொதிப்பு, ரத்த சோகை நோய், சிறுநீரக கோளாறுகள், அடிக்கடி சளிப்பிடிக்கும் போதும் தலைச்சுற்று ஏற்படலாம்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App