facebook pixel
chevron_right Top
transparent
எச். ராஜா போன்றவர்களை தூக்கித் தூரப் போட்டால்தான்.. பாஜகவுக்கு நல்லது!
கடந்த காலங்களில் திராவிட இயக்க தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு பல இருந்தாலும் பரஸ்மர மரியாதையும் நட்புணர்வும் நீடித்தே வந்திருக்கிறது. இதனால் தமிழக அரசியல் ஒரு கண்ணிய பாதையிலேயே பயணித்து வந்தது என்றே சொல்லலாம். இத்தகைய அரசியல் நாகரீகம்தான் இரண்டு திராவிட கட்சிகளின் வெற்றிக்கு முக்கியமான அஸ்திரமாக இருந்தது. இதனால்தான் இவர்களது அறிக்கைகள் கூட வெகுஜன மக்களை எளிதாக சென்றடைந்து சிந்திக்கவும் வைக்க செய்தது. ஆனால், திடீர் பாஜக தலைவர்களின் (பழைய பாஜக தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஓரளவு நாகரீகமாக பேசக் கூடியவர்கள்) பேச்சுக்கள் வரம்பு மீறி சென்று கொண்டிருக்கின்றன. அதில் எப்போதுமே முதன்மையானவர் எச்.ராஜாதான். வாயைத் திறந்தாலே விஷமப் பேச்சாகத்தான் வெளி வருகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App