facebook pixel
chevron_right Entertainment
transparent
பரிதி இளம்வழுதி மீது நில மோசடி வழக்கு!
திமுக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தில் தர்ம தோப்பு என்ற அறக்கட்டளை உள்ளது.இந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக அங்கு ஏழரை ஏக்கர் நிலம் உள்ளது.அதன் ஒரு பகுதியை பரிதி இளம்வழுதி மற்றும் அவர் உதவியாளர் கக்காரீன்,வாசு,சிட்டிபாபு உள்பட 24 பேர் ஆக்கிரமித்ததாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக தாம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, அந்த அறக்கட்டளையின் அறங்காவலர் கங்கா ரெட்டி,உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிதி இளம்வழுதி உள்பட 24 பேர் மீதும் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App