facebook pixel
chevron_right Sports
transparent
சச்சின் குறித்து நெகிழும் சர்தார் சிங்!
சச்சின் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என ஹாக்கி வீரர் சர்தார் சிங் தெரிவித்துள்ளார். இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் இளம் வயதில் இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றதுடன் சுமார் 8 ஆண்டுகள் இந்திய அணியை வழிநடத்தினார். இவரது தலைமையின் கீழ் இந்திய அணி பல்வேறு தொடர்களில் சிறப்பாக விளையாடி உள்ளது. எனினும் கடந்த 2016ம் ஆண்டு இவர் கேப்டன் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார். சமீபத்தில் நடந்துமுடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தோல்வியடைந்த பின் சர்தார் சிங் ஆட்டத்திறன் மீது விமர்சனங்கள் எழுந்தன. இது சர்ச்சையான நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சர்தார் சிங் அறிவித்தார். அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் நேரம் இது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App