facebook pixel
chevron_right Top
transparent
சேலம், கோவை, கடலூர் ஆகிய மத்திய சிறைகளில் போலீசார் திடீர் சோதனை
23:31 சென்னை : புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற போட்டோக்கள் கடந்த வாரம் வெளியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று காலை முதல் சேலம் மற்றும் கடலூர் மத்திய சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் சிறையில் சேலம் தெற்கு சரக குற்ற பிரிவு உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில் 40 போலீசாரும், கடலூர் மத்திய சிறையில் டிஎஸ்பி லாமேக் தலைமையிலான 100 க்கும் மேற்பட்ட போலீசாரும் காலை 6 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதே போன்று கோவை மத்திய சிறையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 180-க்கும் அதிகமான போலீசார் 3 சிறைகளிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App