facebook pixel
chevron_right Top
transparent
எல்லாரும் யூனிபார்மை கழட்டிட்டு போங்க.. போகிற போக்கில் டிஜிபியை அவமானப்படுத்திய எச்.ராஜா -வீடியோ
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீசுக்கும் நீதிமன்றத்திற்கு எதிராக கொச்சையாக பேசிய எச்.ராஜா, போகிற போக்கில் தமிழக டிஜிபியை குறித்து தவறாக பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு காரணமாக அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. நேற்று புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அங்கு கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தார். போலீசையும், நீதிமன்றத்தையும் கொச்சையான வார்த்தைகளில் திட்டினார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App