facebook pixel
chevron_right Top
transparent
நான் லஞ்சம் தரேன், வெட்கமா இல்லை.. போலீசை மிரட்டிய எச்.ராஜா.. கெஞ்சிய போலீஸ்!
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் எச்.ராஜா போலீசை திட்டும் வீடியோ வைரலாகி உள்ளது. இதில் போலீஸ் அவரிடம் தொடர்ந்து கெஞ்சுவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட கூடாது என்று பெரிய பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை அமைக்க பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அங்கு கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தார். போலீசையும், நீதிமன்றத்தையும் கொச்சையான வார்த்தைகளில் திட்டினார். இது வீடியோவாக வெளியாகி உள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App