facebook pixel
chevron_right Top
transparent
இனி நான் வாழ்றதே வேஸ்ட்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை
இளைஞர் ஒருவர் தூக்கு போட்டுதற்கொலை செய்துகொண்டார். ஆனால் அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நந்தன்கோட்டையை சேர்ந்த அஜய் என்னும் 22 வயது இளைஞர், மீன்மார்க்கெட்டில் லோடு மேனாக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று சாயங்காலம் அவர் வழக்கம்போல் வேலையில் இருந்தார். அப்போது ஒரு செல்போன் அழைப்பு அவருக்கு வந்தது. போனில் யாரோ பேச பேச அஜய்யின் முகமெல்லாம் அதிர்ச்சி, வேதனை, கலக்கம் என எல்லாம் ஒன்றாக கலந்து வந்தன. பிறகு போனை கட் செய்துவிட்டார். இதையெல்லாம் கூடஇருந்து பார்த்து கொண்டிருந்தவர்களிடம், அழ ஆரம்பித்துள்ளார். அவர்களும் அஜய் எதற்காக அழுகிறார் என்று தெரியாமலும் புரியாமலும் ஆறுதல் சொன்னார்கள்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App