facebook pixel
chevron_right Top
transparent
அரியானா மாணவி வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர்
அரியானா மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மூன்று பேரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசிப்பவர் ஒரு 19 வயதுப் பெண். படிப்பில் மிகவும் கெட்டிக்காரியான அந்தப் பெண் சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக மோடியிடம் விருது பெற்றவர் ஆவார். அவர் கடந்த 12-ஆம் தேதி சிறப்பு பயிற்சி வகுப்புக்குச் சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பும் போது அவரை வழிமறித்த மூன்று வாலிபர்கள் அவரை ஒரு காரில் கடத்திச் சென்றனர். அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை அந்த மூவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த வயலில் இருந்த மற்றவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை வன்கொடுமை செய்துள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App