facebook pixel
chevron_right Politics
transparent
தற்போதுள்ள அரசை அகற்றிவிட்டு கூட்டாட்சியை ஏற்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும்: ஈரோடு மதிமுக மாநாட்டில் வைகோ பேச்சு
16:58 ஈரோடு: மத்தியில் தற்போதுள்ள அரசை அகற்றிவிட்டு, கூட்டாட்சியை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளின் அரசு அமைய வேண்டும் என்று ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக மாநில மாநாட்டில் வைகோ பேசினார். ஈரோட்டில் நடந்த மதிமுக மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: நாட்டில் ஜனநாயகத்திற்கு தற்போது ஆபத்து உள்ளது. இன்றைக்கு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.5 கோடி செலவு வேண்டியுள்ளது. திராவிட முன்னேற்றக்கழகத்தால் வார்ப்பிக்கப்பட்டவன் நான். எனது அரசியல் பொதுவாழ்வு 54 ஆண்டு ஓடி மறைந்தாலும் பல மறக்க முடியாத சம்பவங்கள் உண்டு. 1978ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் எனது கன்னிப்பேச்சில் மாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்துவிட்டு, இந்தி திணிப்புக்கு எதிராக பேசினேன். தொடக்க காலத்தில் நாடாளுமன்றத்தில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் எனக்கு எப்படி பேச வேண்டும் என்று பயிற்சி கொடுத்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App