facebook pixel
chevron_right Top
transparent
எத்தனை தினகரன்கள் வந்தாலும் ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது: அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
15:31 சென்னை: எத்தனை தினகரன்கள் வந்தாலும் இந்த ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பஸ் நிலையம் எதிரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது: அண்ணாவின் 110வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெரியாரின் பாசறையில் வந்து மக்களுக்காக பணியாற்றியவர். கட்சியை குடும்ப பாசத்தோடு வழிநடத்தியவர். சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தவர். தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் 50 ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட உள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App