facebook pixel
chevron_right Sports
transparent
கால்பந்து: இந்திய கனவு கலைந்தது
தெற்காசிய கால்பந்து பைனலில் தடுமாறிய இந்திய அணி, மாலத்தீவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து, கோப்பையை கோட்டைவிட்டது. வங்கதேசத்தில், 12வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்நடந்தது.தாகாவில்நடந்த பைனலில் இந்தியா, மாலத்தீவு அணிகள் மோதின. போட்டியின் 19வது நிமிடத்தில் மாலத்தீவு அணியின் ஹசன் பந்தை சக வீரர் இப்ராகிமுக்கு 'பாஸ்' செய்தார். கச்சிதமாக பந்தை கொண்டு சென்ற இவரின் முயற்சியை இந்திய தற்காப்பு வீரர்கள் தடுக்க தவறினர். இதை பயன்படுத்திய இப்ராகிம் மாலத்தீவு அணிக்கு முதல் கோல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 0-1 என பின்தங்கியது. பலவீனமான தற்காப்பு ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் இந்திய அணிக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. மாலத்தீவின் ஹம்சத் பந்தை அலி பசிருக்கு தந்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App