facebook pixel
chevron_right Sports
transparent
விராத் கோஹ்லி ஓய்வு சரியா
"கிரிக்கெட் உலகமே எதிர்பார்க்கும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பங்கேற்காமல் ஓய்வில் இருப்பது ஏமாற்றம் தருகிறது," என முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்தார். ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியில் கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்டதால், ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பேற்றுள்ளார். இதில் வரும் 19ம் தேதி இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. கிரிக்கெட் உலக மோதலின் சிகரமாக பார்க்கப்படும் இந்த முக்கிய போட்டியில் கோஹ்லி பங்கேற்காததால் இரு நாட்டு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து முன்னாள் இந்திய தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் கூறியது: தொடர்ச்சியான போட்டிகளால் வீரர்கள் சோர்வடைகின்றனர். நெருக்கடி அதிகரிக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App