facebook pixel
chevron_right Sports
transparent
மொயீன் கிளப்பும் 'ஒசாமா' புகார்
ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் தன்னை ஒசாமா என கேலி செய்ததாக மொயீன் அலி குற்றம் சாட்டினார். இங்கிலாந்து அணி 'ஆல் ரவுண்டர்' மொயீன் அலி, 31. சுயசரிதையை 'டைம்ஸ்' பத்திரிகையில் எழுதி வருகிறார். இதில், மறைந்த பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை தன்னுடன் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒப்பிட்டதாக குற்றம் சுமத்தி உள்ளார். இது குறித்து மொயீன் அலி கூறியுள்ளது: கடந்த 2015ல் சொந்த மண்ணில் நடந்த முதல் ஆஷஸ் டெஸ்டில் (கார்டிப்) வெற்றிக்கு கைகொடுத்ததை மறக்கவே முடியாது. என்னை மற்றொரு சம்பவமும் பாதித்தது. களத்தில் இருந்தபோது என்னை நோக்கி, ஆஸ்திரேலிய வீரர் ஒருவர்,' இந்த ஒசாமாவை சீக்கிரமாக அவுட்டாக்க வேண்டும்,' என கூறினார். களத்தில் அமைதியாக இருக்கும் நான் இவரின் விமர்சனத்தால் மிகவும் கோபம் அடைந்தேன்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App