facebook pixel
chevron_right Top
transparent
கற்பழிப்பு குற்றச்சாட்டு எதிரொலி: பொறுப்புகளை மற்றொருவரிடம் பேராயர் ஒப்படைத்தார்
கற்பழிப்பு குற்றச்சாட்டு காரணமாக பொறுப்புகளை மற்றொருவரிடம் பேராயர் ஒப்படைத்தார். கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகாரில் சிக்கிய பேராயர் பிராங்கோ மூலக்கல், தனது பொறுப்புகளை மற்றொருவரிடம் ஒப்படைத்தார். இதற்கிடையே அவருக்கு எதிரான போராட்டம் நேற்று 8-வது நாளை எட்டியது. கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் மீது கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். கேரளாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை, வைக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு 19-ந் தேதி (புதன்கிழமை) ஆஜராகுமாறு பேராயர் பிராங்கோவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App