facebook pixel
chevron_right Sports
transparent
தெற்காசிய கால்பந்து போட்டி: இந்திய அணியை வீழ்த்தி மாலத்தீவு 'சாம்பியன்'
வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்தது. டாக்கா, 12-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான மாலத்தீவை எதிர்கொண்டது. இறுதிபோட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த ரசிகர்களின் கனவு ஈடேறவில்லை. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் மாலத்தீவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு 2-வது இடத்துடன் திருப்திபட வேண்டியதானது. மாலத்தீவு அணியில் இப்ராகிம் 19-வது நிமிடத்திலும், அலி பாசிர் 66-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணி தரப்பில் சுமீத் பாசி 90-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App