facebook pixel
chevron_right Top
transparent
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் பலி
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் சவுகாம் கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் போலீசாருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். பாதுகாப்பு படையினர் விடியவிடிய பயங்கரவாதிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை அவர்கள் நெருங்கினர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் சுட்டனர். சிறிதுநேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் பாதுகாப்பு படையினர் காயம் இன்றி உயிர்தப்பினர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App