facebook pixel
chevron_right Sports
transparent
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையரில் இந்தியா தோல்வி
செர்பியா அணிகள் இடையிலான உலக குரூப் 'பிளே-ஆப்' சுற்று போட்டி செர்பியாவின் கிரால்ஜெவோ நகரில் நடந்து வருகிறது. கிரால்ஜெவோ, டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-செர்பியா அணிகள் இடையிலான உலக குரூப் 'பிளே-ஆப்' சுற்று போட்டி செர்பியாவின் கிரால்ஜெவோ நகரில் நடந்து வருகிறது. முதல் நாளில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ராம்குமார், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வியை தழுவினர். 2-வது நாளான நேற்று இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- சகெத் மைனெனி ஜோடி 6-7 (5), 2-6, 6-7 (4) என்ற செட் கணக்கில் போதிய அனுபவம் இல்லாத செர்பியாவின் நிகோலா மிலோஜெவிச்- டேனிலோ பெட்ரோவிச் இணையிடம் வீழ்ந்தது. இதன் மூலம் இந்த போட்டியை இந்தியா 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App