facebook pixel
chevron_right Top
transparent
வேன் மீது லாரி மோதியது: தாய்-மகள் உள்பட 5 பேர் நசுங்கி பலி
உத்தர கன்னடா அருகே, வேன் மீது லாரி மோதிய விபத்தில் தாய்-மகள் உள்பட 5 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். உத்தர கன்னடா மாவட்டம்(கார்வார்) ஒன்னாவர் தாலுகா கர்கிமடம் வழியாக எடப்பள்ளி-பன்வேல் தேசிய நெடுஞ்சாலை 66 செல்கிறது. இப்பகுதியில் நேற்று மாலை பயணிகளை ஏற்றிக் கொண்டு குமட்டாவில் இருந்து ஒன்னாவர் நோக்கி ஒரு வேன் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே ஒரு லாரி வந்தது. இந்த சந்தர்ப்பத்தில் அந்த லாரி, வேன் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வந்து வேனில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App