facebook pixel
chevron_right Top
transparent
கால்டாக்சியில் பெண் கற்பழிப்பு: டிரைவருக்கு ஆயுள் தண்டனை உறுதி
கால்டாக்சியில் பெண் கற்பழிப்பு வழக்கில், டிரைவருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. டெல்லியை அடுத்த குர்கானில் நிதி அதிகாரியாக வேலை பார்த்து வந்த 25 வயதான பெண் ஒருவர், பணியை முடித்துவிட்டு டெல்லியில் உள்ள வீட்டுக்கு திரும்புகையில் வசந்த் விகார் பகுதியில் இருந்து ஊபர் கால்டாக்சியில் பயணம் செய்தார். அவர் கண் அயர்ந்தபோது, அந்தக் காரின் டிரைவர் சிவகுமார் யாதவ், அவரை ஆள் அரவமற்ற ஒரு பகுதிக்கு கடத்திச்சென்று, காரில் வைத்து கற்பழித்தார். அப்போது அவர் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி 'நிர்பயா' கற்பழிப்பின்போது குற்றவாளிகள் நடந்து கொண்டதை, அந்தப் பெண்ணிடம் சுட்டிக்காட்டி மிரட்டியும் உள்ளார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App